Aran Sei

உத்தரபிரதேசம்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி வலதுசாரிகளால் தாக்கப்பட்ட இஸ்லாமியர்

த்தரபிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் மாட்டிறைச்சி மற்றும் மாடுகளைக் கடத்தியதாக சந்தேகப்பட்டு இஸ்லாமியரான ஒரு வேன் ஓட்டுநரைக் கிராம மக்கள் சிறைபிடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

கிராம தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த வேனில் இறந்த  விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்தக் கொண்டு சென்றுள்ளனர். அந்த வேனில் மாடுகள் அல்லது மாட்டிறைச்சி எதுவும் கொண்டு செல்லப்படவில்லை. கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பீகார்: பசுக்காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமிய இளைஞன்

அந்த இளைஞரை ஒரு கும்பல் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த காணொளியில் சட்டை கிழிக்கப்பட்ட நிலையில், அந்த இளைஞர் கெஞ்சியும், அந்த கும்பல் அவரை பெல்ட்டால் தாக்கியுள்ளனர். ஒரு நபர் மட்டும் அந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை வெளியே தள்ளியுள்ளனர் என்று என்.டி.டீ.வி கூறியுள்ளது.

வலது சாரி குழுக்களின் சில உறுப்பினர்கள் உட்பட 16 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்