Aran Sei

உத்தரபிரதேசத்தில் நூற்றாண்டுகள் பழமையான மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் – நீதி வேண்டி உயர்நீதிமன்றத்தில் வக்பு வாரியம் மனு

த்தர பிரதேசத்தில் பராபங்கி பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கரீப் நவாஸ் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் சார்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான மசூதி – உரிய நடவடிக்க எடுக்க வக்பு வாரியம் அரசிடம் வேண்டுகோள்

கடந்த மே 19 அன்று, இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளை உயர்மட்டக்குழு விசாரணை செய்ய வேண்டுமெனவும் அம்மாநில சன்னி வக்பு வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனிநபர் சட்ட வாரியம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கடந்த ஏப்ரல் 3 அன்று மசூதியை இடிக்க உத்தரவிட்ட மாவட்ட நீதிபதியின் உத்தரவுகளை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், அதே இடத்தில் மசூதியைக் கட்டித்தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மர்மான முறையில் கறிக்கடைக்காரர் இறந்ததாகப் புகார் – காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

மேலும், இந்த மனுவின் மற்றொரு மனுதாரரான சன்னி வாரியம், புதிய மசூதியைக்கட்ட 25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்