Aran Sei

பொருள் விற்பனைக்கு கடவுள் பெயரை பயன்படுத்துவது சட்டவிரோதம் – மும்பை உயர் நீதிமன்றம்

டவுளின் பெயரையும் பயன்படுத்தி, ஒரு பொருளுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்கள் இருப்பதாகக் கூறி அதனை விளம்பரப்படுத்துவது “சட்டவிரோதமானது” என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வு அறிவித்துள்ளது. இது மகாராஷ்டிரா மனித தியாகம், பிற மனிதாபிமானமற்ற, பில்லி சூனியம் மற்றும் தவறான செயல்களை ஒழிக்கும் சட்டத்தின் கீழ் குற்றம் என்றும் அது கூறியுள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜேந்திர அம்போர் என்ற ஆசிரியர் ஹனுமான் சாலிசா யந்திரம் (அச்சனியார் சங்கிலி டாலர்) போன்ற பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்குத் தடை விதிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.வி.நலாவடே மற்றும் எம்.ஜி.செவ்லிகர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது.

போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை : ’அம்பேத்கர் போராடிப் பெற்ற உரிமையைக் கைவிடக்கூடாது’ – திருமாவளவன்

2015-ம் ஆண்டு, மார்ச், மாதம் பாபா மங்கல்நாத் என்பவர் சித்தி அடைந்தவர், ஆஞ்சநேயரின் ஆசிர்வாதம் பெற்றவர் என்று கூறி அவர் தயாரித்த ஹனுமான் டாலரை பெற்றால் சிறப்பான, அதிசயமான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பண்புகள்/ குணங்கள் கிடைக்கும் என்று விளம்பரங்கள் வெளியாகின என ராஜேந்திர அம்போர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.4900 ஆகக் கூறப்பட்டது மற்றும் 24 காரட் தங்கத்தால் ஆனது என்று கூறப்பட்டது. பாடகர்கள் மற்றும் பிற பிரபலங்கள் இதனை பயன்படுத்திய பின் தங்கள் அனுபவத்தைப் பற்றிப் பேசும் காட்சிகள் இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஊடக வழியாக விளம்பரம் செய்பவர்கள் இவற்றை வெவ்வேறு டாலராகக் காட்டுவதற்கு கடவுள் மற்றும் பாபாவின் பெயர்களை மாற்றியுள்ளார்கள் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் நினைவு நாள்: மாலையிட வந்த அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்பு

“பில்லி சூனியம் தடுப்பு சட்டத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள குறிக்கோள்களை கல்வியின் மூலம் அடையாளம். தவறான பழக்கவழக்கங்களை அகற்றவும், மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வை பரப்பவும் பணியாற்றிய மகாத்மா பூலே மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற சீர்திருத்தவாதிகள் இந்த மண்ணில் தாம் பிறந்தவர்கள்” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இது போன்ற குற்றங்களை பதிவு செய்யுமாறு மாநில மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற விளம்பரங்களை வெளியிடும் நபர்களை பற்றிய தகவலை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அத்தகைய விளம்பரங்கள் எதுவும் விளம்பர வடிவிலோ நிகழ்ச்சியாகவோ ஒளிபரப்பப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த மும்பையில் தனித்தனி விசாரனை குழுக்கள் உருவாக்க மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்