இந்தியாவில் ’கொரோனாவை குணப்படுத்த’ மாட்டு சாணத்தை பயன்படுத்துவது கொடிய கருப்பு பூஞ்சை (முக்கோர்மைகோசிஸ்) நோயை ஏற்படுத்தக்கூடும் என, அமெரிக்க தொற்றுநோய் தடுப்பு மருத்துவர் ஃபஹீம் யூனஸ் தெரிவித்துள்ளார்.
முக்கோர்மைசோசிஸ் நோய் தொடர்பான அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இணையதளத்தில் வெளியான கட்டுரையைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “இந்தியாவில் கொரோனாவை குணப்படுத்த மாட்டு சாணத்தை பயன்படுத்துவது கொடிய கருப்பு பூஞ்சை (முக்கோர்மைகோசிஸ்) நோயை ஏற்படுத்தக்கூடும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “இதை என்னால் நிரூபிக்க முடியாது, ஆனால் மிகவும் சாத்தியம்” என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/FaheemYounus/status/1392684515542372354?s=20
இந்நிலையில், வாஷிங்கடனின் டல்லஸ் விமான நிலையத்தில், இரண்டு உலர் மாட்டு சாணங்களை (வரட்டிகள்) கொண்ட பெட்டியை, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (சிபிபி) அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக வைஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோயை ஏற்படுத்துவதற்கான அபாயத்தைக் கொண்டிருப்பதால், தடை செய்யப்பட்ட பொருட்களைக் கண்டுபிடித்தது வருத்தத்தை தருகிறது. இதனால் நோய் வேகமாக பரவக்கூடும் என்பதால், அமெரிக்க விவசாயத்துறை இதை ஒரு உலகளவிய பிரச்னையாக பார்க்கிறது” என்று சிபிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், இந்திய பயணிகள் அமெரிக்காவிற்கு உலர் பசு மாட்டு சாணத்தை எடுத்துவருவதை தவிர்க்க வேண்டும் என, அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக வைஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.