Aran Sei

மாநிலங்களவையில் அதிகரித்து வரும் பிராந்திய மொழிகளின் பயன்பாடு – இந்தி எதிர்ப்புதான் காரணமா?

மாநிலங்களவையின் அமர்வுகளில் பிராந்திய மொழிகளின் பயன்பாடு 2018-2020 காலகட்டத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. பட்டியலில் உள்ள 22 மொழிகளில் இந்தி, தெலுங்கு, உருது, தமிழ் ஆகிய மொழிகளுக்கு அடுத்த ஐந்தாவது இடத்தில் சமஸ்கிருதம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையின் தலைவர் வெங்கையா நாயுடு, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் அவர்களின் தாய்மொழியில் பேசலாம் என்று அறிவித்தார். இதன் பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பட்டியலிடப்பட்ட 22 மொழிகளிலும் ஒரே நேரத்தில் விளக்க வசதிகள் கிடைப்பதாக அறிவிப்பு வெளிவந்ததையடுத்து மாநிலங்களவையின் தலைவரான வெங்கையா நாயுடு 10 மொழிகளில் பேசியிருக்கிறார்.

மாநிலங்களவைச் செயலகம் மேற்கொண்ட ஆய்வின்படி, மாநிலங்களவையின் அமர்வுகளின் போது இந்தி மற்றும் ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழிகளாக இருந்தாலும், இந்தியை தவிர்த்து பட்டியலில் உள்ள 21 பிற இந்திய மொழிகளின் பயன்பாடு ஐந்து மடங்காக (512 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் – “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் ” : குடிமக்கள் குழு

மேலும், இந்த ஆய்வில், 1952 ஆம் ஆண்டிலிருந்து மாநிலங்களவை நடைமுறையில் இருந்தாலும் டோக்ரி, காஷ்மீர், கொங்கனி, சோந்தாலி ஆகிய நான்கு மொழிகள் இந்த காலகட்டத்தில் தான் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்றும் அசாமி, போடோ, குஜராத்தி, மைதிலி, மணிப்பூரி, நேபாளி போன்ற மொழிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் கூடும் நாடாளுமன்றம் – விவாதிக்கப்படும் பிரச்சினைகள்

மாநிலங்களவை உறுப்பினர்கள், 2004 முதல் 2017 வரை நடந்த 923 அமர்வுகளில் 269 முறை இந்தியை தவிர்த்து 10 பட்டியலிடப்பட்ட மொழிகளில் (0.291 சதவீதம்) உரையாடியதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் மாநில,மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் பேரணி – விவசாய சங்கங்கள் அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு மாநிலங்கவையில் நடந்த 33 அமர்வுகளில் மிக அதிகமாக பிராந்திய மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் இது கடந்த முறையை விட 512 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 முதல் 2017 வரை நடைபெற்ற 329 அமர்வுகளில், மாநிலங்களவை உறுப்பினர்கள் பிராந்திய மொழிகளில் (இந்தி தவிர) 96 முறை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும், 2018-20 ஆம் ஆண்டில் நடைபெற்ற 163 அமர்வுகளில், விவாதங்களின் போது பிராந்திய மொழிகள் 135 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

” டிரம்பை பதவி நீக்க முயற்சித்தால், வன்முறை வெடிக்கும் ” – அமெரிக்காவில் வன்முறை அபாயம் நீடிக்கிறது

மாநிலங்களவையில் 2013 முதல் 2017 ஆண்டுவரை நடைபெற்ற 329 அமர்வுகளில் இந்தி தவிர பயன்படுத்தப்பட்ட பிராந்திய மொழிகளில் தமிழ் 32, தெலுங்கு 19, உருது 19, பெங்காலி 6, மராத்தி 3 , ஒடியா 5, கன்னடம் 2, பஞ்சாபி 2, மலயாளம் 2 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்து தகர்க்கிறார்’ – உலக தலைவர்கள் கண்டனம்

மாநிலங்களவையில் 2018 முதல் 2020 ஆண்டு வரை நடைபெற்ற 163 அமர்வுகளில் இந்தி தவிர பயன்படுத்தப்பட்ட பிராந்திய மொழிகளில் தமிழ் 18, தெலுங்கு 33, உருது 24, பெங்காலி 17, மராத்தி 6, ஒடியா 6, கன்னடம் 5, பஞ்சாபி 3, அஸ்ஸாமிஸ் 2 முறையும் சமஸ்கிருதம் 12 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. தொடர்ச்சியாக மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதாக மாநிலங்கள் குற்றச்சாட்டும் நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும்  மாநில உரிமையையும் நிலைநாட்டும் வகையில் மாநிலங்களவையில் பிராந்திய மொழிகளில் உறுப்பினர்கள் பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மக்களவையில் உறுப்பினர்கள் பதவி பிரமாணம் மேற்கொண்ட போது தங்களின் மாநில மொழிகளில் உறுதி மொழி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்