முழுவதுமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் உள்ள தற்போதைய சூழலில் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து இருக்கிறது. ஆகவே, இந்தியாவுக்குப் பயணம் செய்வதை தவிருங்கள் என்றும் தனது நாடு குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீங்கள் முழுவதுமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் உள்ள தற்போதைய சூழலில் உருமாறிய கொரோனா தொற்றால் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான ஆபத்துகள் இருக்கின்றன. ஆகவே, இந்தியாவுக்குப் பயணம் செய்வதை தவிருங்கள்.” என்று தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேபாளம் விரையும் இந்தியர்கள்: இந்தியாவின் பற்றாக்குறை காரணமா?
ஒருவேளை, நீங்கள் இந்தியாவுக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டியிருந்தால், தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட பிறகு செல்லுங்கள் என்று அம்மையம் அறிவுறுத்தியுள்ளது.
“அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். மற்றவரிடமிருந்து 6 அடி தூரத்திற்கு இடைவெளி விட்டு தள்ளி நின்று பழகுங்கள். கூட்டத்தைத் தவிருங்கள். கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். இந்தியாவில் இருந்து திரும்பியபின்னர், தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தனிமைப்படுத்தலுக்கு பின்னரே அமெரிக்காவில் அனுமதிக்கப்படுவீர்கள்.” என்று அவ்வறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று எண்ணிக்கை 103 –ஐ தொட்ட போதே, பயணம் செய்வதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்துவிட்டதாக அமெரிக்க சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
Source : Zee News
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.