அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐநா சபையின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து வெளியேறிய நடவடிக்கை கடந்த காலங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் முடிவை ஜோ பைடனின் அரசாங்கம், இந்த வாரத்தில் அறிவிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவின் மூலம் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் திரும்பப் பெறும் முடிவுகளில் ஒன்றாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, ஐநா மனித உரிமை கவுன்சிலிற்கு மீண்டும் ஒரு பார்வையாளரகவும், தேர்தல்மூலம் முழு உறுப்பினராகவும் மாறும் என்ற அறிவிப்பைப் பிப்ரவரி 8 ஆம் தேதி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனும், மூத்த அமெரிக்க தூதரும் ஜெனிவாவில் அறிவிப்பார்கள் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி – வைகோ கண்டனம்
அமெரிக்காவின் இந்த முடிவு பழைமைவாதிகள் மற்றும் இஸ்ரேல் ஆதரவு ஆட்களின் விமர்சனத்திற்குள்ளாகும் எனத் தெரியவருகிறது.
ஐநா மனித உரிமை குழுவில் இதுவரை இல்லாத அளவாக, கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மற்றும் சர்வாதிகார நாடுகளின் தீர்மானங்களைப் பெற்ற இஸ்ரேல் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாகக் கூறி 2018 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியேறினார்.
திகார் சிறையிலும் குலையாத விவசாயிகளின் போராட்ட உறுதி – பத்திரிகையாளர் மன்தீப் புனியா
ஐநா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவின் இருப்பு தொடர்பாகக் கருத்து தெரிவித்த மூத்த அதிகாரி. கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக ஜோ பைடனின் நிர்வாகம், நினைப்பதாகவும், அதை மேற்கொள்ளக் கவுன்சிலுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றும், “உலகெங்கிலும் நடக்கும் அநீதிகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இது ஒரு முக்கிய மன்றமாக இருக்கும” என்றும், அமெரிக்க இருப்பு, “அந்த மன்றத்தைச் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிபடுத்தும்” என்றும் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு இறுதி வரை அமெரிக்கா வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும். இந்த ஆண்டு இறுதியில் ”மேற்கு ஐரோப்பா மற்றும் பிற நாடுகள் பிரிவு”ற்கு நடைபெற இருக்கும் தேர்தலில், தற்போது ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி நாடுகள் வகிக்கும் 3 உறுப்பினர் இடங்களில் ஒரு இடத்தில் வெற்றி பெற அமெரிக்க முனையும்.
கடந்த மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பையன் பொறுப்பேற்றதிலிருந்து, பாரீஸ் ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் இணைந்திருப்பதோடு, ஈரான் ஒப்பந்தம் மற்றும் யுனெஸ்கோவில் இணைய ஆர்வம் தெரிவித்துள்ளார்.
Sources : AP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.