கொரோனா தடுப்புசிகளுக்கு வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை தள்ளுபடி செய்யும் உலக வர்த்தக அமைப்பின் முயற்சியை ஆதரிக்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உலகளவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என முடிவை இந்தியாவும் தெனாப்பிரிக்காவும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முன்மொழிந்திருந்தன.
”அமெரிக்க அரசு அறிவுசார் சொத்துரிமை (intellectual property) பாதுகாப்பில் வலுவான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றிற்கு சேவை செய்யும் பொருட்டு, கொரோனா தடுப்பூசிகளுக்கான அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தள்ளுபடி செய்வதை ஆதரிக்கிறது.” என அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி கேத்ரின் தாய் தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது – மத்திய அரசுக்கு முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை
மேலும் ‘அசாதாரண சூழ்நிலைகளில் அசாதாரணமான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது’ என அவர் கூறியுள்ளார்.
அறிவுசார் சொத்துரிமை தள்ளுபடி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நேரம் எடுக்கும் என்றும் கேத்ரின் குறிபிட்டுள்ளார்.
”தேவையானவற்றை மேற்கொள்ள உலக வர்த்தக அமைப்புடன் எழுத்துப்பூர்வமான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபடுவோம். நிறுவனத்தின் தன்மை மற்றும் சிக்கலின் தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு நேரம் எடுக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் முன்மொழிவின் அடிப்படையில், கொரோனா தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் தூதர்களுடன், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் என்கோசி ஒகோன்ஜோ – இவெலா நேற்று (மே 5) விவாதத்தார்.
இந்த முன்மொழிவிற்கு 100க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளித்திருக்கின்றன. அமெரிக்காவில் இந்த முன்மொழிவை ஆதரிக்க அந்நாட்டு அதிபர் ஜோப்பைடனுக்கு அழுத்தங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 110 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாகப் பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
‘உத்தர பிரதேசத்தில் மனிதனாக இருப்பதை விட மாடாக இருப்பதே மேல்’ – சஷி தரூர்
முன்னதாக ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் உள்ளிட்ட ஒன்பது பேர் அதிபருக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
”மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி அளிப்பது என்பதே அமெரிக்க அரசின் நோக்கம்” என்பதை கேத்ரின் தாய் வலியுறுத்தியுள்ளார்.
அறிவுசார் சொத்துரிமை தள்ளுபடி தொடர்பான அமெரிக்க அரசின் முடிவிற்கு அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர்.
Source : Reuters
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.