Aran Sei

கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம்  – 150 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக அதிபர் பைடன் விமர்சனம்

மெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டு கால தீர்ப்பை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருக்கலைப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்களே கட்டுப்படுத்தலாம். இனி கருக்கலைப்பு சட்டப்பூர்வ உரிமை கிடையாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவசேனாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன்னர், 1973 ஆம் ஆண்டு, ரோ. இ. வேட் என்பவரது ஆட்சியின் போது ‘கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை சட்ட உரிமை’ எனக்கூறி அமெரிக்காவில் கருக்கலைப்பு தேசியமாக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு நேர் எதிராக தேசிய அளவில் வழங்கப்பட்டிருந்த கருக்கலைப்பிற்கான சட்ட உரிமை ரத்து செய்யப்பட்டு, இனி அந்தந்த மாகாணங்களே கட்டுப்படுத்தலாம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு: அதிகரிக்கும் காவல் சித்திரவதை மரணங்களும் அதிகார வர்க்கத்தின் கோர முகங்களும் – தீர்வு என்ன?

கருக்கலைப்பு சட்டத்தை வரம்பிற்குள் கொண்டு வர இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ள மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “சட்டத்தை வரம்புக்குள் கொண்டு வர அவர்கள் முயலவில்லை. வெளிப்படையாக உரிமைகளை பறித்துள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் அமெரிக்கர்களின் அடிப்படையான அரசியலமைப்பு உரிமையை மிகவும் வெளிப்படையாக நீதிமன்றம் பறித்துள்ளது. இந்த தீர்ப்பின் வழியாக இதுவரை செய்யாத ஒரு செயலை நீதிமன்றம் செய்துள்ளது. என் பார்வையில் இது ஒரு தீவிர சித்தாந்தத்தின் வெளிப்பாடு. உச்சநீதிமன்றம் ஒரு மோசமான பிழையை செய்திருக்கிறதென்றே நான் கருதுகிறேன். கிட்டத்தட்ட 150 வருடங்கள் அமெரிக்காவை பின்னோக்கி இந்த தீர்ப்பு அழைத்து சென்று விட்டது.”  என்று கூறியுள்ளார்.

புதிய இந்தியாவில் மோடி நண்பர்களின் குரல் மட்டுமே கேட்கும்; தேசத்தின் நாயகர்கள் குரல் அல்ல – ராகுல் காந்தி விமர்சன

இந்த தீர்ப்பு என்னை திகைக்க வைக்கிறது. அமெரிக்காவுக்கும் நீதித்துறைக்கும் இது சோகமான நாள். 50 ஆண்டுகளுக்கு முன் வந்த தீர்ப்புக்கு நேரெதிராக வந்துள்ள இந்த தீர்ப்பினால் அமெரிக்க பெண்களின் வாழ்க்கை தற்போது ஆபத்தில் உள்ளது. 150 வருடங்கள் அமெரிக்காவை இந்த தீர்ப்பு பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது. இந்த தீர்ப்பு வகுக்கும் பாதை, மிகவும் ஆபத்தானது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கருத்தரித்தலுக்கான அடிப்படை உரிமைகளை கோரி இந்த அரசு போராடும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் எம்.எல்.ஏ/ எம்பிகளுக்கு எதற்கு ஓய்வூதியம் – பாஜக எம்பி வருண்காந்தி கேள்வி

“கருக்கலைப்பு தொடர்பான முயற்சியில், எந்த மாகாணத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும், அவர்களை பாதுகாக்க இந்த அரசு எப்போதும் இருக்கும் என உறுதியளிக்கிறேன். இதுபோன்ற எந்தவொரு தீர்ப்பும், ஒரு பெண்ணின் தேர்வு உரிமைக்கு உத்தரவாதம் அளிக்காது” என்று பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து போராடுவோரை, `அமைதியான முறையில் போராடுங்கள்’ எனக்கூறி போராட்டத்துக்கும் பைடன் அனுமதி அளித்திருக்கிறார்.

இந்த கருக்கலைப்பு தீர்ப்பு கருத்தடை சாதனங்களின் உபயோகிப்பு மற்றும் ஓரினச்சேர்க்கை திருமண உரிமைகளை குறைக்கக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

திமுகவை கேள்வி கேட்க சி.வி.சண்முகம் யார் | Senthilvel Interview | ADMK Latest News

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்