Aran Sei

செனெட் சபையில் தோல்வியடைந்த அமெரிக்க கலவரம் தொடர்பான தீர்மானம் – குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார் டொனால்ட் ட்ரம்ப்

மெரிக்காவின் கேப்பிடல் ஹில் பகுதியில் நடைபெற்ற கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்ப் மீது இரண்டாவது முறையாகக் குற்றம்சாட்டி செனெட் சபையின் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், குடியரசு கட்சியினர் ட்ரம்பிற்கு ஆதரவாக வாக்களித்தை அடுத்து குறைந்த வாக்குவித்தியாசத்தில் தண்டனையிலிருந்து தப்பினார் ட்ரம்ப்.

ஜனவரி 6 ஆம் தேதி கலவரம் தொடர்பான காணொளியை ஊக்குவத்ததன் மூலம், ட்ரம்ப் தனது பதிவி பிரமானத்தின்போது செய்து  கொடுத்த சத்தியத்திதை மீறி, அதிகாரத்தைக் கைப்பற்றும் இறுதி முயற்சியாக தனது ஆதரவாளர்களை நாடாளுமன்ற மீது தாக்குதல் நடத்த தூண்டினார்  என குடியரசு கட்சியினர் வாதிட்டனர்.

‘உங்களால்தான் நாங்கள் இருக்கிறோம்’ – விவசாயிகள் போராட்டக்களத்தில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி

பொரும்பாலான குடியரசு கட்சியினர், ட்ரம்ப் குற்றமற்றவர் எனக் கூறியதிலிருந்து, 74 வயதாக டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு குடியரசு கட்சியில் தொடர்வது தெரிகிறது.

ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் சரிபாதி எண்ணிக்கையில் இருக்கும் 100 உறுப்பினர்கள் கொண்ட செனெட் சபையில், வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் மட்டுமே அவருக்கு எதிராக வாக்களித்ததன் மூலம், 57 – 43 என்ற முறையில் தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.

ஜனவரி 20 ஆம் தேதி பதவியிலிருந்து விலகியதிலிருந்து புளோரிடாவில் வசித்து  வரும் ட்ரம்ப் இந்தத் தீர்ப்பை வரவேற்றதுடன், இந்த நடவடிக்கைகளை, “இது நம் வரலாற்றில் மிகப்பெரிய சூனிய வேட்டையின் மற்றொரு கட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுரின் சட்டவிரோத கைது – ஹரியானா அரசிற்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

இந்த இரண்டாவது குற்றச்சாட்டினால், தனக்கு ஏற்பட்ட கறையை பொருட்படுத்ததாத, சாத்தியமாகக்கூடிய  எதிர்காலம்குறித்து பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவை மீண்டும் வலிமையானதாக மற்றுவதற்கான வேலையை வரலாற்று சிறப்புமிக்க, தேசபக்தி கொண்ட, அழகான எங்களது இயக்கம் இப்போது தான் தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்

”எங்களுக்கு  நிறைய வேலைகள் உள்ளன, விரைவில் ஒரு பிரகாசமான, வலிமையான, வரம்பற்ற அமெரிக்க எதிர்காலத்திற்கான ஒரு திட்டத்துடன் வருவோம்”  என அந்த  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்களே அதிர்ச்சியடையும் விதமாக, கேப்பிடல் ஹில் பகுதியில் நடைபெற்ற   வன்முறை சம்பவங்களுக்கு ட்ரம்பின் தூண்டுதலே காரணம் என  குற்றம்சாட்டும் முதல் தீர்மானம், பிரநிதிகள் அவையில் ஜனவரி 13 ஆம் தேதி நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

Source : AP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்