ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கு தேசத்தின் கட்டுமானத்தில் இல்லை; அழிவில் தான் இருந்துள்ளது என சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பணி ஒருபோதும் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்புவதாக இருந்திருக்க கூடாது என்பது உண்மை தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதை மேற்கொள் காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.
காபூல் ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் காணப்பட்ட காட்சிகள் குழப்பமானது, துக்ககரமானது, மிகவும் பரிச்சையமானதாக தோன்றுகிறது என அவர் கூறினார்.
”பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தால் நுழைந்த அமெரிக்கா போரைத் தொடங்கியது. ஆனால் இதில் வெற்ற் பெற்றதா?. கடந்த 20 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பயங்கரவாத குழுக்களின் எண்ணிக்கை 20க்கும் அதிகமானதாக உயர்ந்ந்துள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகாம ஆப்கான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அமைதிய கொண்டு வந்ததா?’ என ஹுவா கேள்வி எழுப்பினார்.
அமெரிக்கா அதன் படைப்பிரயோகம் மற்றும் ராணுவ தலையீடுகள் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற போர்வையில், மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதன் வழியாக அவர்களின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வேலைகளை அமெரிக்க நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹுவா கூறினார்.
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நட்பு நாடான சீனா, எப்பொழுது அந்நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து, அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல், அந்நாட்டு மக்களுக்கு ஆதரவான ஒரு நட்புக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது என ஹுவா தெரிவித்தார்.
Source : Global Times
தொடர்புடைய செய்திகள் :
தலைநகர் காபூலுக்குள் நுழைந்த தாலிபான்கள் – தாலிபான்களிடம் வீழ்ந்ததா ஆப்கானிஸ்தான் அரசு?
ஆப்கானிஸ்தான் பகுதிகளைக் கைப்பற்றி வரும் தாலிபான்- அதிகாரத்தைப் பகிர்ந்துக் கொள்ள அரசு அழைப்பு
ஆப்கானிஸ்தான்: அமெரிக்காவின் தோல்வியும் தாலிபான்களின் மறு வருகையும்
உள்கட்டமைப்பு திட்டங்களை முடித்துக்கொடுக்க வாருங்கள் – இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த தாலிபான்கள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.