Aran Sei

அமெரிக்க கலவரம்: சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க முடியாது – மோடி

அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதற்குள் நுழைய முயன்ற அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே  ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட்ட 4 பேர் துப்பாக்கிசூட்டில் பலியாகியுள்ளார்கள் மற்றும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து ட்ரம்ப் பல்வேறு குற்றசாடுகளை எழுப்பியுள்ளார். தேர்தல் முடிவுகளை மாற்ற சொல்லி அதிகாரிகளை மிரட்டிய ஒலிநாடா ( audio tape) வெளிவந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. தோல்வியால் ட்ரம்ப் உளறுவதாக கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். அதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை

இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்று நடந்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

காவல்துறை பாதுகாப்பை மீறி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை உள்ளே விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஆரம்பமானது.

“அமைதியாகுங்கள் ட்ரம்ப்; அமைதியாகுங்கள்” – கிரெட்டா துன்பெர்க் பதிலடி

பிரச்சனையைக் கட்டுக்குள் கொண்டுவர கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைக்க முயன்றனர். இதனால், காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான கவல்துறையினர் காயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கையில் ஆயுதங்களுடனும், சிலர் துப்பாக்கிகளுடன் போலீஸாரைத் தாக்கியுள்ளனர். இதனால், கூட்டத்தைக் கலைக்கவும், தற்காப்புக்காகவும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு பெண் உயிரிழந்தார், 3 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் என்கவுன்டர் – நீதி வேண்டும் : போலீஸ் விளக்கத்தை மறுக்கும் இளம் காஷ்மீரிகளின் குடும்பத்தினர்

இதுகுறித்து வாஷிங்டன் டிசி காவல்துறை தலைவர் ராபர்ட் கான்டி கூறுகையில் “ நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 52 பேர் கைது செய்ய பட்டுள்ளனர். ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்த ஆயுதங்களையும், பைப் வெடிகுண்டு, துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தார்கள். தற்காப்பு நடவடிக்கையாக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்” எனத் தெரிவித்துள்ளார்.

நேர்காணலைப் பாதியில் நிறுத்திய ட்ரம்ப் – பேட்டியை முன் கூட்டியே வெளியிட திட்டம்

அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுங்கள். வன்முறை வேண்டாம். நினைவில்கொள்ளுங்கள், சட்டம் ஒழுங்கிற்கு நமது கட்சிதான் பொறுப்பு. சட்டத்தை மதித்து கலைந்து செல்லுங்கள். போலீஸாருக்கும், சட்டத்துக்கும் மதிப்பு கொடுங்கள். அமைதியாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலவரம் குறித்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் “”ஜனநாயகம்  உடையக்கூடிய சூழல் வேதனையானது என்பதை நினைவூட்டியது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க விருப்பமுள்ள மக்கள் தேவை. எழுந்து நிற்க தைரியம் கொண்ட தலைவர்கள், எந்தவொரு  நிலையிலும் அதிகாரத்தையும் தனிப்பட்ட நலனையும் பின்தொடராத  பொது நன்மைக்காக அர்ப்பணிப்பு கொண்டவர்கள்தான் ஜனநாயகத்தைக் காக்க இயலும்” என்று தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

போர் மற்றும் மோதல்கள் மூலம், அமெரிக்கா மிகவும் சகித்துக்கொண்டது. நாம் இங்கே சகித்துக்கொள்வோம், இப்போது வெற்றி பெறுவோம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

“சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது” என்று  வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற வன்முறை குறித்து பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

Source : aljazeera.com

  

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்