Aran Sei

‘இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள்’ – ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியாவை விமர்சித்த அமெரிக்கா

Credit: The Wire

ந்தியாவில் சில அதிகாரிகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதை அமெரிக்கா கண்காணித்து வருவதை அமெரிக்க வெளியுறவுத்ஹ்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இங்கு பகிரப்பட்ட மதிப்பு (மனித உரிமைகள்) குறித்து இந்தியப் பிரதிநிதிகள் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். சில அரசாங்கம், காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளால் ஏற்படும் உரிமை மீறல்கள் உள்ளிட்ட இந்தியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் சந்திப்பிற்கு பிறகு கூட்டாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிளிங்கன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்து ராஷ்ட்ரா – இந்துஃபோபியா; ஒன்றிய அரசின் இரட்டை சவாரிக்கான காரணம் என்ன? – மு.அப்துல்லா

இது தொடர்பாக ஆண்டனி பிளிங்கன் விரிவாக பேசாத நிலையில், அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோரும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை விமர்சிக்க அமெரிக்கா தயக்கம் காட்டுவதாக, அமெரிக்க பிரதிநிதி இல்ஹான் ஓமர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பிளிங்கனின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

2014 ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மோடியின் இந்துத்துவ தேசிய ஆளும் கட்சி வகுப்புவாத பிரிவினையை உருவாக்கி வருவதாக ஓமன் குற்றம்சாட்டியுள்ளார்.

பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மத மாற்றங்களைத் தடுக்க முயற்சிப்பதாகக் கூறி, சிறுபான்மையினர் மீது வலதுசாரி இந்து அமைப்புகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனபல இந்திய மாநிலங்கள் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன அல்லது மதமாற்ற மேற்கொள்ள அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட உரிமைக்கு சவால் விடுக்கின்றன.

பீகார்: மசூதி மேல் காவிக்கொடியை ஏற்றி ராமநவமி கொண்டாடிய வலதுசாரியினர்

2019 ஆண்டில்,குடியுரிமைச் சட்டத்தை அரசாங்கம்  நிறைவேற்றப்பட்டது, இது அண்டை நாடுகளில் இருந்து வந்து குடியேறிய இஸ்லாமியர்களை குறிவைப்பதன் மூலம், இந்திய அரசியலமைப்பை குறைத்து மதிப்பிடுவதாக விமர்சகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

அதே ஆண்டில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி வந்த மோடி அரசு, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.

அண்மையில், பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை மற்ற மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் கோரி வருகின்றன.

Source: Reuters

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை மிரட்டும் இந்துத்துவாவினர். பதிலளிக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்