Aran Sei

உக்ரைன்-ரஷ்யா போருக்கு அமெரிக்காவே காரணம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை

ஷ்யாவின் கிழக்கு எல்லையின் நாடுகளில் நேட்டோவின் படைகள், ஏவுகணைகள் இருப்பதால், அதன் பாதுகாப்பிற்காக உக்ரைன் நேட்டோவில் சேர்க்கக்படகூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியமானது என்றும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ரஷ்யாவின் கிழக்கு நோக்கி விரிவடைந்து வருவதே உக்ரைன் – ரஷ்யா போருக்குக் காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை ‘துரதிர்ஷ்டவசமானது’ என்றும், அதே சமயம் ஆயுதப் போர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1

அதே சமயம் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதில் இருந்து, ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படிப்படியாக ரஷ்யாவின் கிழக்கு நோக்கி விரிவடைந்து வருவதையும், உக்ரைனை நேட்டோவில் இணைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சி ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்திருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

“கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோவின் படைகள் மற்றும் ஏவுகணைகள் இருப்பதால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக ரஷ்யாவும் அதன் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளது. ஆகவே உக்ரைன் நேட்டோவில் சேர்க்கக்பட கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியமானது.

“உக்ரைனில் அமைதியை நிலைநாட்டப்பட வேண்டுமானால், கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதி உட்பட அனைத்து மக்களின் உண்மையான பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்கான போதுமான நடவடிக்கை பாஜக அரசு எடுக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட இதே நிலையைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எடுத்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலைக்குக் காரணம் அமெரிக்காதான். ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் விரிவாக்க நடவடிக்கைகளே ரஷ்யாவைப் போரில் இறங்கக் கட்டாயப்படுத்தியது என்று சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

நேட்டோவை ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் உலகின் மற்ற எந்தப் பகுதிக்கும் விரிவுபடுத்துவதற்கான அமெரிக்கவின் நடவடிக்கை என்றுமே உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று டி.ராஜா கூறியுள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்