Aran Sei

இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் “விரைவாக” நாடு திரும்புக – அமெரிக்க அரசு எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசு தனது சுகாதார எச்சரிக்கையை 4ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“முன் எப்போது இல்லாத அளவில் இந்தியாவில் கொரேனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை பல இடங்களில் குறைவாகவே உள்ளன. மருத்துவமனைகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதினா ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் இல்லை என்று கூறியுள்ளன” என்று அமெரிக்க உள்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவில் மருத்துவ உதவி கிடைப்பது குறைந்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்க அரசு, தற்போது தினசரி இயக்கப்பட்டு வரும் இந்தியா-அமெரிக்கா இடையிலான விமானத்தின் மூலம், அமெரிக்கர்கள் நாடு திரும்பலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்