காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்குத் திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாத அமைப்பினர் மீது அமெரிக்கா அரசு டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26, வியாழக்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எல் நடத்திய தாக்குதலில் 175 ஆப்கானியர்களும், 13 அமெரிக்கப் படையினரும் உயிரிந்தனர்.
CENTCOM Statement on Counterterrorism Strikehttps://t.co/L3UgtvPa6k
— U.S. Central Command (@CENTCOM) August 28, 2021
இதனைத்தொடர்ந்து இந்தத் தாக்குதலுக்கு பதிலடி தருவோம் என்று அமெரிக்கா அதிபர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்கப் படையின் கம்மாண்டர்,”ஆளில்லா விமானம் வழியாக ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளோம். முதற்க்கட்ட தகவலின்படி நாங்கள் இலக்கை தாக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
source:அல் ஜசீரா
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.