ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப்படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளது வரலாற்றுத் தருணம் , இனி ஆப்கான் சுதந்திரமான, இறையாண்மைக் கொண்ட தேசமாக இருக்கும் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கப்படைகளை வெளியேறியதை வெடிவெடித்தும் வான் நோக்கித் துப்பாகியால் சுட்டும் தாலிபான்கள் கொண்டாடியுள்ளார்
இதுகுறித்து தெரிவித்துள்ள தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஹபிஹுல்லாஹ் முஜஹிட், ” இஸ்லாமிய அமீரகமான ஆப்கான் இனி சுதந்திரமும், இறையாண்மையும் கொண்ட தேசமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், “எங்கள் தேசத்தால் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டுள்ளது. உலகத்தின் பிற நாடுகளுடன் நாங்கள் நல்ல உறவைப் பேண விரும்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, “தாலிபான்கள் சுதந்திரம், இஸ்லாமிய பண்புகள் மற்றும் தன்னாட்சி ஆகியவற்றைக் காப்பாற்றுவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
source: அல் ஜசிரா
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.