Aran Sei

இந்தியாவிற்கு 60 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் – அமெரிக்க அதிபரிடம் மக்கள் உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள்

கொரோனா இரண்டாம் அலையில் தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவிற்கு 60 மில்லியன் தடுப்பு மருந்துகள் வழங்கப்படவேண்டுமென அமெரிக்காவை சார்ந்த மக்கள் உரிமை செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி.எல்.ஜாக்சன் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் குழுக்களை முகநூல் நிறுவனம் கட்டுப்படுத்தவில்லை – மக்கள் உரிமை அமைப்பினர் குற்றச்சாட்டு

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “நோய் பரவல் நாடுகளுக்கான சிக்கல் இல்லை, மனிதநேயத்திற்கு எதிரான சிக்கல்” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

இதே போன்று, உயிர்காக்கும் மருந்துகள் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இந்திய நண்பர்கள் குழுவைச் சார்ந்த பாரத் பராய், “அமெரிக்க அதிபர் ஆன்டி வைரல் மருந்துகளான ரெம்தேசிவிர் மற்றும் டோஸிலீஸுமப் மருத்துகளை இந்தியாவிற்கு உடனடியாக வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக என்டிடிவி  செய்தி கூறுகிறது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களுக்கு சட்ட உதவி வழங்க வேண்டும் – மனித உரிமை அமைப்பு மனு

அமெரிக்காவின் பல்லுயிர் மருத்துவர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர், அமெரிக்கா அதிபர் பைடன் மத்திய சர்வதேச அவசர உற்பத்திச் சட்டத்தை செயல்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் , இதனால் அமெரிக்காவில் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும் என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்