அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பணியின்போது சரிவர இடைவேளை தராததால் பெரும்பாலான ஊழியர்கள் காலியான பாட்டில்களில் சிறுநீர் கழித்து வருகின்றார்கள் என்று ஆர்கனைஸ் (ORGANISE) என்ற தொழிலாளர்களுக்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதே போல அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 55% தொழிலாளர்கள் பணியின் போது மனஅழுத்ததில் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
” தொழிற்சங்க உரிமையில் முதலாளிகள் தலையிட முடியாது ” – அமேசான் ஊழியர்களுக்கு ஆதரவாக ஜோ பைடன்
அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தரப்படும் இலக்குகளை எட்ட முடியாது என்பதால் 74% பணியாளர்கள் கழிவறையை பயன்படுத்தவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
I got photos of Amazon workers' pee bottles. They are, in fact, real. https://t.co/vYnkvf4CTm
— Lauren Kaori Gurley (@LaurenKGurley) March 25, 2021
இதே போல 81.5% ஊழியர்கள் மீண்டும் அமேசானில் பணிக்கு விண்ணப்பிக்கமாட்டேன் எனவும் ,18.5% ஊழியர்கள் மீண்டும் அமேசானில் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் ஆர்கனைஸ்யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமேசான், ரிலையன்ஸ் மோதல் – ஃபியூச்சர் ரிடெய்ல் பங்குகளை விற்க தடை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை
மேலும், இந்த அறிக்கை சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு இலக்குகளைக் குறைக்க வேண்டும், நிர்வாகத்தோடு பேச ஊழியர்களின் சங்க பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும். 30 நிமிட முழுமையான இடைவெளி , பணியில் இடையிலும் சிறுநீர் கழிக்க உரிமை போன்ற பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.
1/2 You don’t really believe the peeing in bottles thing, do you? If that were true, nobody would work for us. The truth is that we have over a million incredible employees around the world who are proud of what they do, and have great wages and health care from day one.
— Amazon News (@amazonnews) March 25, 2021
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமேசான் நிறுவனம் , “பாட்டில்களில் சிறுநீர் கழிப்பதை நீங்கள் உண்மையில் நம்பவில்லை, இல்லையா? அது உண்மையாக இருந்தால், யாரும் எங்களுக்கு வேலை செய்யமாட்டார்கள். உண்மை என்னவென்றால், உலகெங்கிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் எங்களிடம் உள்ளனர், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள், முதல் நாளிலிருந்து பெரும் ஊதியம் மற்றும் சுகாதாரப் பணிகளைக் உறுதிசெய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.