Aran Sei

கொரோனா தடுப்பூசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: இந்திய மக்களைவிட உங்களுக்கு யார் முக்கியம்? – பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஆம்ஆத்மி எம்.எல்.ஏ

கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாட்டை தவிர்க்க ’தடுப்பூசி உலகமயமாக்கல்’ மற்றும் ’தடுப்பூசி தேசியமயமாக்கல்’ உடனடி தேவை என பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சாதா கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் இளம் மக்கள் பிரதிநிதி மற்றும் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என்ற முறையில் இதை எழுதியுள்ளதாக தெரிவித்திருக்கும் அவர், இந்திய மக்களின் கொரோனா தேவையைப் புறக்கணித்து விட்டு, 84 நாடுகளுக்கு 6.4 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் ’இராஜதந்திர சாகசத்தில்’ மோடி ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – நடிகர் சோனு சூட்

”இந்தியாவில் தடுப்பூசி மையங்கள் தடுப்பூசிகள் இல்லாமல் மூடப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. இந்திய அரசு எந்த மக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதை கேட்க விரும்புகிறேன். டெல்லியா? டாமனிக் குடியரசா?, மகாராஷ்டிராவா? மொரீஷியஸா?, மேற்கு வங்கமா? வங்காள தேசமா?, குஜராத்தா? கயானாவா?, ஒடிசாவா? ஓமனா?, உத்திரபிரதேசமா?பிரிட்டனா? இதில் யாருக்கு முன்னுரிமையும் பாதுகாப்பும் அளிக்கபோகிறீர்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”மற்ற நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுவதை கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. இந்தியர்கள் பாதிக்காதவண்ணம் உதவுங்கள் என்றே கூறிக்கொள்கிறோம். இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்தபிறகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுங்கள் என்பதே எங்களின் கோரிக்கை” என ராகவ் கூறியுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்