Aran Sei

‘வீடு ஒதுக்க 1.5 லட்சம் கேட்கும் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்’ – புளியந்தோப்பு மக்கள் போராட்டம்

ந்த விளக்கமும் அளிக்காமல் தங்களிடம் ஒன்றரை லட்சம் பணத்தை மட்டும் கேட்கும் அரசின் போக்கை கண்டிப்பதாக சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி பார்க் பகுதிவாசிகள் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பில் உள்ள கேசவப்பிள்ளை பார்க் பகுதியைச் சேர்ந்த குடிசை பகுதி மக்களுக்கு வீடு ஒதுக்குவதற்காக தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் ஒன்னரை லட்சம் ரூபாய் கேட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீப கால கட்டத்தில் சென்னை புளியந்தோப்பில் உள்ள கேசவப் பிள்ளை பார்க் பகுதி கட்டிடங்கள் தரமற்று இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு  எழுந்தது. இந்தப் பிரச்சினை தமிழ்நாடு சட்டப்பேரவை வரையிலும் எதிரொலித்தது. மக்களின் குறைகள் விரைவாக களையப்படும் என்ற உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு அளித்தும் தற்போது வரை எந்தப் பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தங்களுக்கு தங்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் லிப்ட் கனெக்சன் கூட இன்னும் வரவில்லை என்று  போராட்டத்தில் ஈடுபட்ட அம்மக்கள் தெரிவித்தனர்.

இன்று காலை ஏறத்தாழ 9 மணி முதல் நடந்த போராட்டத்தில் கேசவ பிள்ளை பார்க் பகுதியைச் சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளில் வாழும் குடியிருப்புவாசிகள், தமிழக அரசு ஒன்றரை லட்சம் தொகை கேட்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும், 9 மற்றும் 11 மாடிகளைக் கொண்ட தங்கள் கட்டிடங்களுக்கு உடனடியாக லிப்ட் இணைப்பைக் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை எழுதி பதாகைகளாக ஏந்தியிருந்தனர்.

மக்களின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்