Aran Sei

இந்தியாவெங்கும் தண்ணீரில் கிடைக்கும் யூரேனியம் – அணு ஆராய்ச்சி மைய ஆய்வில் தகவல்

ந்தியாவெங்கும் நீரில் கதிரியக்கத்தனிமமான யூரேனியம் உள்ளதா என நடத்தப்பட்ட ஆய்வில் 83.6% மாதிரிகளில் யூரேனியம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாபா ஆராய்ச்சி மையம் நடத்திய இந்த ஆய்வில் நாடுமுழுவதிலும் இருந்து 55,554 நிலத்தடி  மற்றும் நீர்நிலை நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.

ஜப்பான் அணுக்கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு – சர்வதேச நீதிமன்றத்தை நாடிய தென் கொரியா

மேலும், நீரில் யூரேனியம் இடம் பெற்றிருப்பதை கண்டறிய பி.ஐ.எஸ் பரிந்துரைத்திருக்கும் 12 சோதனைகளில் 8 ல் அனுமதிக்க பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, சல்பேட், குளோரைடு, நைட்ரேட், ப்ளூரைடு, மொத்தக் கரைந்த திடப்பொருள்கள், காரத்தன்மை மற்றும் கடினத்தன்மை ஆகியவை முறையே 4.2 சதவீதம், 12.9 சதவீதம், 14 சதவீதம், 20.5 சதவீதம், 34.3 சதவீதம், 45 சதவீதம் மற்றும் 51.6 சதவீதமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உயர்த்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

5G அலைக்கற்றை ஏலத்தில் பங்கெடுக்கப்போவதில்லை – ஏர்டெல்

மேலும், அணு ஆற்றல் ஒழுங்குப்படுத்துதல் மற்றும் கதிரியக்க பாதுகாப்பு ஆணையம் நிர்ணயித்திருக்கும் யூரேனியத்தின் தேசிய அளவை விட 98% மாதிரிகளில் குறைவாகவே உள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்