Aran Sei

குடிமைப் பணித் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோரை விட மிகக் குறந்த மதிப்பெண்ணில் தேர்வாகும் முன்னேறிய வகுப்பினர் – கேள்விக் குறியாகிறதா சமூகநீதி?

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக, யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை விட பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான (இ.டபிள்யூ.எஸ்) கட் ஆஃப் மதிப்பெண் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Photo Credit : The New Indian Express

இந்த ஆண்டு இ.டபிள்யூ.எஸ் பிரிவில் 86 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் இ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 894 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மதிப்பெண் 907 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வின் ஆரம்பநிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலில் என மூன்று நிலைகளிலும் இ.டபிள்யூ.எஸ் பிரிவிற்கான கட் ஆஃப் மதிப்பெண் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை விட குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் இதர பதவிகளுக்கான 836 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் இருந்து 761 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீன் கீழ் 76 பேர் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட சில பிரிவினரை இட ஒதுக்கீன் வரம்பிலிருந்து விலக்கி வைக்க முடியாது என பாஜக தெரிவித்து வரும் நிலையில், 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்ட விரோதமானது என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

”இட ஒதுக்கீட்டால் தகுதியானவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கப்படுவதாக பொருளாதார இட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், தற்போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மதிப்பெண்னை விட குறைவான மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான பி வில்சன் தெரிவித்துள்ளார்.

1992 ஆம் ஆண்டில் இந்திரா சஹானி வழக்கில், இட ஒதுக்கீட்டின் வரம்பு 50 விழுக்காட்டை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அறிவியல் தரவுகள் இல்லாததால் மகாராஷ்டிராவில் வழங்கப்பட்ட மராட்டிய சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீடு வழங்குவதில் நியாயம் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அமேசான் நிறுவனம் குறித்த ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்து அர்த்தமற்றது’ – காங்கிரஸ் கட்சி கண்டனம்

சமீபத்தில் வெளியான SBI வங்கியின் பணியாளர் தேர்வு முடிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவுகளைவிட உயர்சாதி ஏழைகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் குறைவாக இருந்ததற்கு கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், UPSC தேர்வு முடிவுகளிலும் EWS பிரிவின் மதிப்பெண்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Source : The New Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்