Aran Sei

முசாபர் நகர் கலவரம் தொடர்பான 77 வழக்குகளை நீக்கிய உத்தரபிரதேச அரசு – உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தகவல்

டந்த 2013 நடந்த முசாபர் கலவரம் தொடர்பான  77 வழக்குகளை உத்தரபிரதேச மாநில அரசு எவ்விதக் காரணங்களும் கூறாது திரும்பப்பெற்றுள்ளதாக  உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கை வாயிலாக வழக்குகள் நீக்கப்பட்டுள்ளது  தெரியவந்துள்ளது. 

  மேலும், இந்தக் கலவரம் தொடர்பாக 6,869 பேர் குற்றம்சாட்டப்பட்டு 510 வழக்குகள் பதியப்பட்டது. இதில் 175 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு,  165 வழக்குகளில் இறுதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,   170 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 77 வழக்குகளை குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 321 ன் கீழ் அம்மாநில அரசு நீக்கியுள்ளதாகவும், இந்த பிரிவின் கீழ் வழக்குகள் திரும்பப்பெறப்பட்டதற்கான காரணத்தை அம்மாநில அரசு எவ்விதக் காரணங்களையும் கூறவில்லை என்றும்  அந்த அறிக்கை  கூறுகிறது.

மேலும், “பெரும்பான்மையானகக்   கொள்ளை குற்றம் சுமத்தப்பட்ட இந்த 77 வழக்குகளை நீக்கியதில் அம்மாநில அரசே முழுமுடிவையும் எடுத்துள்ளது” என்றும் அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, 62 வழக்குகளைக் கர்நாடக அரசு எவ்வித காரணங்களையும் கூறாமல் நீக்கிய நிலையில் அந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதே போன்று, தமிழ்நாட்டில் 4 வழக்குகளும்,தெலுங்கானாவில்  14 வழக்குகளும், கேரளாவில்  36 வழக்குகளும் நீக்கப்பட்டுள்ளது.

source:தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்