Aran Sei

உ.பி. தேர்தலில் கிரிமினல் வழக்கு பின்னணி உள்ள வேட்பாளர்கள் ஏன்? – பாஜக விளக்கம்

த்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 107 வேட்பாளர்களின் பட்டியலில், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட 25 பாஜக வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கிரிமினல் வழக்குகளெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக புனையப்பட்டவை என்று பாஜக தெரிவித்துள்ளது.

நான்கு கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள துணை முதலமைச்சர் மௌரியா, சிரத்து தொகுதியில் வேட்பாளராக களமிறங்க உள்ளார். அவரது சமூகப் பணிகள் மற்றும் மாநில மக்களின் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்சியின் மாவட்டப் பிரிவினால் மௌரியாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்று பாஜக தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஏன் வாய்ப்பு வழங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய இந்தியத் தேர்தல் ஆணையம், குற்றவியல் தொடர்பு இல்லாத நபர்களை வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்க முடியாததற்கான காரணங்களை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கேட்டுக்கொண்டுள்ளது.

“அரசியல் காழ்ப்பின் காரணமாக மவுரியா வழக்குகளில் சிக்கியுள்ளார், மற்ற வேட்பாளர்களை விட அவர் முன்னுரிமை பெற்றுள்ளார்” என்று பாஜக தெரிவித்துள்ளது.

தானா பவன் வேட்பாளரும், அமைச்சருமான சுரேஷ் ராணா மீது மூன்று வழக்குகள் இருப்பதாகவும் பாஜக அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் கரும்பு வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள அவர், விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை வழங்குவதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

ஃபதேபூர் சிரி தொகுதியின் வேட்பாளர் பாபு லால் மீது ஏழு வழக்குகள் உள்ளன.

புதானா தொகுதியில் போட்டியிடும் உமேஷ் மாலிக், முசாபர்நகர் தொகுதியில் போட்டியிடும் கபில்தேவ் அகர்வால், மீரட் கண்டோன்மென்ட் தொகுதியில் அமித் அகர்வால் ஆகியோர் மீதும் தலா 6 வழக்குகள் உள்ளன. போடப்பட்ட வழ்க்குகளெல்லாம் அரசியல் காழ்புணர்ச்சியின் காரமாக பதியப்பட்டுள்ளதாக பாஜக நியாயப்படுத்தியுள்ளது.

Source: News 18

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்