Aran Sei

ட்விட்டர் இணையதளத்தில் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட விவகாரம் – நிர்வாக இயக்குநர்மீது புகாரளித்த பாஜக அமைச்சர்

ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர்மீது, உத்தரபிரதேச காவல்துறையை தொடர்ந்து, மத்தியபிரதேச காவல்துறையும் வழக்கு பதிந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆகியவற்றை இந்திய வரைபடத்தில் அல்லாது, தனி வரைபடத்தில் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த வரைபடம் கடும் எதிர்ப்புக்கு உள்ளானதை அடுத்து, அப்படத்தை ட்விட்டர் நிறுவனத்தின் இணையத்திலிருந்து நீக்கியது.

ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர்மீது பஜ்ரங்தள் புகார் – முதல் தகவல் அறிக்கை பதிந்த உத்தரபிரதேச காவல்துறை

இந்நிலையில், மத்தியபிரதேச மாநில உள்துறை அமைச்சர்,  ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மனிஷ் மஹேஸ்வரி மீது புகார் அளித்ததில் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ”  சில சமயங்கள்  பாரத மாதாவுக்கு  எதிராக  எதாவது  கூறிக்கொண்டிருக்கிறது. இப்போது தேசத்தின் தவறான வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் பதிவிட்டுள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் குறைதீர்க்கும் அதிகாரி பதவி விலகல் – ஒன்றிய அரசின் அழுத்தம் தான் காரணமா?

இந்நிலையில், நரோட்டம் மிஸ்ரா அளித்த புகாரின் பெயரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505[2} ன் கீழ், ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் அந்நிறுவனத்தின் செய்தி பங்களிப்பாளர் அம்ரிதா திரிபாதி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்