Aran Sei

பாஜக ஆளும் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் – வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை

மேற்கு உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில், மாமனாரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற 19 வயது பெண், தாக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு ஒருவரை கைது செய்திருப்பதாக ஆக்ரா காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காணொளி வெளியிட்ட ஆக்ரா  காவல்துறை தலைவர் நவீன் அரோரா, “ஆக்ராவில் மோசமான சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மற்ற இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இது தொடர்பாக தடவியல் குழுவினரின் உதவியையும் பெற்றுள்ளோம். மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவிட்டது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

“அவர்கள் எங்களை அருகில் உள்ள காட்டுக்கு இழுத்துச் சென்று, எனது ஆடைகளை கிழித்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த செயலை படம் பிடித்தனர்., நாங்கள் யாரிடமாவது சொன்னால் எங்களைக் கொன்றுவிடுவோம் என்று அவர்கள் கூறினார்கள்” என்று அந்தப் பெண் புகாரில் கூறியுள்ளார்.

போக்சோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? – ஆராயும் உச்சநீதிமன்றம்

ஆக்ராவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் ஜி வெளியிட்டிருந்த கானொளியில், “இந்தத் தம்பதியினர் காவல் நிலையத்திற்கு வந்து மூன்று பேர் அந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். அந்தப் பெண், குற்றம்சாட்டியிருக்கும் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.” என கூறியிருந்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்