உத்தரப் பிரதேசத்தில் 20 நாட்களுக்கு முன்பு சமூக அறிவியல் பாடத்தில் வைக்கப்பட்ட வகுப்பு தேர்வில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் சரியாக பதில் எழுதாததால் அந்த சிறுவனை அஸ்வினி சிங் என்ற ஆசிரியர் தாக்கியதால் மாணவர் இறந்துள்ளார். தற்போது ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செப்டம்பர் 7ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் உள்ள அச்சால்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது . ’சமூகம்’ என்ற வார்த்தையை தவறாக எழுதியதால், மயங்கி விழும் வரை மாணவரை ஆசிரியர் தாக்கியதாக மாணவரின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் மனு – அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
முதல் மருத்துவ செலவுக்கு முதல் தவணையாக 10,000 ரூபாயும் இரண்டாம் தவணையாக 30 ஆயிரம் ரூபாயை ஆசிரியர் அஸ்வினி சிங் கொடுத்திருக்கிறார். பின்னர், சிறுவனின் உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள்.
இதற்காக ஆசிரியர் அஸ்வினி சிங்கை சிறுவனின் பெற்றோர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோதும், வீட்டுக்கே சென்ற போதும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் அச்சால்டா காவல் நிலையில் ஆசிரியரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று (செப்.26) சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது. ஆகவே, ஆசிரியர் அஸ்வினி சிங் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 308 (காயம் ஏற்படுத்தி உயிரிழக்கச் செய்வது), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்தோடு அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
புதுச்சேரி: பள்ளியை மூடச் சொன்ன பாஜகவினரை விரட்டியடித்த பெற்றோர்கள்
இது தொடர்பாக பேசியுள்ள உயிரிழந்த சிறுவனின் தந்தை ராஜு “செப்டம்பர் 7ம் தேதியன்று சமூக அறிவியல் டீச்சரான அஸ்வினி சிங் வகுப்பில் தேர்வு வைத்திருக்கிறார். என் மகன் நன்றாக படிக்கக் கூடியவன். தேர்வில் சிறிதாக எழுத்துப்பிழை செய்திருக்கிறான். அதற்காக என் மகனின் தலை முடியை இழுத்து அவனை குச்சியால் அடித்து, குத்தியிருக்கிறார். இதனால் வகுப்பிலேயே மயங்கி விழுந்திருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.
நடவடிக்கை எடுக்க கோரி பீம் ஆர்மி அமைப்பு போராட்டம் நடத்தியுள்ளது. போராட்டம் வன்முறையாக மாறியது, சிலர் காவல்துறை ஜீப்பை தீ வைத்து எரித்தனர். மேலும் காவல்துறையினர் மீது கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, சிறுவனின் குடும்பத்தினர் இறுதியாக நிகித்தின் உடலை தகனம் செய்வதற்காக தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர்.
தற்போது, பட்டியல் மற்றும் பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சேற்றில் புரளும் பாஜக, நாதஸ் திருந்தமாட்டான் | Arunan Interview | RSS Parade | MK Stalin accuses BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.