தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கை ஆற்றில் மிதக்கும் சடலங்களின் புகைப்படங்களும் காணொளிகளும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்திர பிரதேசத்தில் ஆறுகளில் சடலங்களை விடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது என்று அம்மாநில அரசு ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.
மே 15 ஆம் தேதி உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில அரசு அதிகாரிகளுடன், ஒன்றிய நீர் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இதைக் கூறியிருக்கிறார்.
மே 11 ஆம் தேதி தூய்மையான கங்கைக்கான தேசியளவிலான திட்டக்குழு (என்எம்சிஜி), கங்கையாற்றில் சடலங்கள் கொட்டப்படுவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு மாநிலங்களுக்கும் அளித்த உத்தரவின் பெயரில் இக்கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் பேசிய உத்தர பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ்னிஷ் துபே, “ஆறுகளில் சடலங்கள் விடும் பழக்கம் மத்திய / கிழக்கு உத்தர பிரதேச பகுதிகளில் நடைமுறை உள்ளது. மத்திய உத்தர பிரதேசத்தின் கான்பூர் உன்னாவ் பிராந்தியத்திலும், கிழக்கு உத்தர பிரதேசத்தின் பனாரஸ்-காசிப்பூர் பகுதியிலும் உள்ளது. மேற்கு மாவட்டங்கள் இத்தகைய சடலங்கள் ஆற்றில் விடப்படும் சம்பவங்கள் எதுவும் பதியப்படவில்லை.” என்று கூறியுள்ளதாக, இக்கூட்டம் தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source; indianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.