Aran Sei

வேளாண் சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டம் சட்ட விரோதமானது – உத்தரபிரதேச அரசு

ன்றிய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் சாலை முடக்கப் போராட்டமானது சட்டவிரோதமானது என்று விவசாயிகளுக்கு புரிய வைக்க முயன்று வருவதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

போராடும் விவசாயிகளால் வைக்கப்பட்ட சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி நொய்டாவைச் சேர்ந்த மோனிகா அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கு தொடர்பாக, உத்தரபிரதேச அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “சாலைகளில் தடுப்புகளை வைத்து தடுப்பது சட்டவிரோதமான செயலென்று, விவசாயிகளுக்குப் புரிய வைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம் முயன்று வருகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பிரமாணப் பத்திரத்தில், “போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் வயதான விவசாயிகள். உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மற்றும் டெல்லி இடையிலான தேசிய நெடுஞ்சாலை 24 முடக்கப்பட்டுள்ளதால், மகாராஜ்பூர் மற்றும் ஹிண்டன் சாலை வழியாக மாற்றுப்பாதையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிகா அகர்வால் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணை இன்று (ஆகஸ்ட் 24) நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரனைக்கு வர உள்ளது.

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், போராடும் விவசாயிகளை டெல்லி எல்லையிலிருந்து நீக்கக் கோரும் பொதுநல மனுவின் மீது, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருந்தது.

அப்போது, “போராடுவதற்கான அடிப்படை உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம். அதை சமன் செய்வது பற்றியோ அல்லது கட்டுப்படுத்துவது பற்றியோ எந்தக் கேள்வியும் இல்லை.” என்று நீதிபதிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Ndtv

தொடர்புடைய பதிவுகள்:

” போராடுவது அடிப்படை உரிமை, கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது” – உச்சநீதிமன்றம்

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – மூடப்பட்ட அதானி நிறுவனமும் மக்கள் போராட்டமும்

ஒன்பது மாதங்களை நிறைவு செய்யும் விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையை அடைந்த தமிழ்நாட்டு விவசாயிகள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்