“உத்தரபிரதேசத்தில் நடைபெறும் தேர்தல் இந்தியாவின் மிகப்பெரிய தேர்தலாகும். இது இங்கு யார் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை மட்டும் தீர்மானிக்க போவதில்லை. இந்த தேர்தல் என்பது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தையும் காப்பாற்றும் தேர்தல்” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
“பாஜக தன்னை உலகின் மிகப்பெரிய கட்சி என்று கூறுகிறது. ஆம் அது உண்மைதான்; உலகில் வேறு எந்த கட்சியும் பாஜக பேசும் அளவுக்குப் பொய் பேசியதில்லை, ஆகவே பொய் மட்டும் பேசும் பாஜக கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
“பாஜக வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை, உரம், யூரியா ஆகியவை கிடைக்கவில்லை. மிகக் குறைவான விலையில் கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட்டின் அளவு கூட சுருங்கிவிடும் அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பாஜக மீண்டும் இங்கு ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 200 ரூபாய் கூட ஆகிவிடும்” என்று அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.