Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: இருவர் கைது; ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஜராக காவல்துறை சம்மன்

ட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை ஆஜராகும்படி உத்தரபிரதேச காவல்துறை கூறியுள்ளது.

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கி அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்ட்ராவில் பந்த்: சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி அழைப்பு

ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யக்கோரி, விவசாயிகள் சங்கங்கள், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, இன்று(அக்டோபர் 8) காலை 10 மணிக்குள் காவல்துறையின் முன் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்பிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த லுவ்குஷ் மற்றும் நிகாசன் தெஹ்சிலின் ஆஷிஷ் பாண்டே என இரண்டு பேரை உத்தரபிரதேச காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் இருவரையும் காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்