Aran Sei

ஹத்ராஸ் வன்கொடுமைக்கு எதிராக போராடிய பெண் செயற்பாட்டாளர்கள் : ஆஜராக நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை

த்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு எதிராக போராடிய 10 பெண் செயற்பாட்டாளர்களுக்கு, காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (19 வயது), ஆதிக்கச்சாதி தாக்கூர் சமூக ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் உடலைப் பெற்றோரிடம் ஒப்படைக்காமல், காவல்துறையினர் இரவோடு இரவாக தகனம் செய்தனர்.

இந்தியாவைவே உலுக்கிய இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கிய யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம், மாநிலத்தின் அமைதிய குலைப்பதற்கும், அரசின் நன்மதிப்பை கெடுப்பதற்கும் சர்வதேச அளவில் சதி நடைபெறுவதாக கூறியது.

ஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் : காவலை நீட்டித்த நீதிமன்றம்

தேசதுரோகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது,  வன்முறையைத் தூண்ட முயற்சித்தது, கொரோனா கால விதிமுறைகளை மீறியது ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் பலர் மீது வழக்குப் பதிவு செய்தது.

வன்கொடுமை வழக்கை விசாரிக்கவில்லையென குற்றச்சாட்டு : ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம்

இந்நிலையில், கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, (2020 ), ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்புணர்வு  சம்பவம் தொடர்பாக, உத்தர பிரதேசத்தின் கோமதி நகரில் போராடிய உஸ்மா பர்வீன், சுமையா ரானா , மது கர்க், மீனா சிங் உள்ளிட்ட 10 பெண் செயற்பாட்டாளர்களுக்கு உத்தர பிரதேச காவல்துறை நோட்டீஸ் அனுப்பி, விசாரணை அதிகாரி முன்னர் ஆஜராகுமாறு கூறியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

’ஹத்ராஸ்’ வன்கொடுமை வழக்கு – துயரத்தின் மேல் படியும் துயரம்

பெண் செயற்பாட்டாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது  தொடர்பாக பேசிய, உத்தர பிரதேச காவல்துறை, போராட்டக்காரர்கள் கொரோனா தொற்றினால் அமலில் இருந்த 144 தடை உத்தரவை மீறியதாகவும், பெண் செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்