Aran Sei

இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநருக்கு உத்திரபிரதேச காவல்துறை நோட்டீஸ்

த்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், முதியவர்மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ’வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டியதற்காக’ ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவருக்கு உத்திரபிரதேச காவல்துறையீனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

முதியவர் தாக்கப்பட்ட காணொளி பகிர்ந்தது தொடர்பாக தி வயர் இணையதளம், மூத்த ஊடகவியலாளர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் ட்விட்டர் இந்தியா நிர்வாகம்மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில் இந்த  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஸ்வரி, இன்னும் 7 தினங்களுக்குள் லோனி காவல் நிலையத்திற்கு வந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”சிலர் தங்கள் ட்விட்டர் கணக்குகளை சமூகத்தில் வெறுப்பை பரப்பும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். ட்விட்டர் நிறுவனம் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காசியாத் லோனி பகுதியைச் சேர்ந்த 72 வயதான அப்துல் சமத் என்ற இஸ்லாமிய முதியவர் தொழுகைக்கு செல்லும் வழியில் தாக்கப்பட்ட காணோளி வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்

தாக்குதலுக்கு உள்ளான அப்துல் சமத், “மதத்தின் காரணமாக நான் தாக்கப்பட்டேன். அவர்கள் என்னை ’வந்தே மாதரம்’ மற்றும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட நிர்பந்தித்ததோடு, எனது தாடியையும் வலுக்கட்டாயமாக மழித்தனர்” என தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக 3 பேரைக் கைது செய்துள்ள காவல்துறை, தாக்குதலுக்கு வகுப்புவாதம் காரணமல்ல, சமத் விற்ற தாயத்தால் கருச்சிதைவு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கருதியதால் சமத்தை தாக்கினர் என தெரிவித்துள்ளனர்.

‘கும்பமேளாவில் போலியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள்’: உத்தரகண்ட் பாஜக அரசு மக்களைப் காக்கத் தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

காவல்துறையின் கருத்த ஏற்க மறுத்துள்ள சமத்தின் மகன் பப்லு சைபி, “எனது தந்தை தாயத்து விற்று வந்தார் எனக்கூறுவது தவறானது. எங்கள் குடும்பத்தில் யாரும் அந்தத் தொழிலைச் செய்யவில்லை. நாங்கள் தச்சு வேலை செய்பவர்கள். காவல்துறையினர் சரியான விசயத்தைக் கூறிவில்லை. அவர்கள் கூறிய கருத்தை அவர்கள் விசாரணை செய்து அவர்கள் நிருபிக்கட்டும்” என கூறியுள்ளார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்