Aran Sei

அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

த்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சூர்யா பிரதாப் சிங் மீது, அம்மாநில காவல் துறை வழக்குப் பதிந்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு என நோட்டீஸ் வெளியிட்ட மருத்துவமனை – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல், மருத்துவமனையின் அருகில் உள்ள நீர்நிலையில் வீசப்பட்டது குறித்து, சூர்யா பிரதாப் சிங் அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,சூர்யா பிரதாப் சிங் ஓராண்டிற்கு முன்னர் எடுக்கப்பட்ட, போலியான காணொளியை பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், உத்தரபிரதேச காவல்துறை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சூர்யா பிரதாப் சிங், “அரசை விமர்சித்த காரணத்தினாலேயே, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த அரசினால் என்னுடைய விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள இயலவில்லை” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்