Aran Sei

கூகுள் தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து பின்னர் நீக்கம் – பிரதமர் மோடியை விமர்சித்ததாக உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கை

பிரதமர் மோடியை விமர்த்த காணொளி தொடர்பாகக் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 மீது கடந்த வாரம் உத்திர பிரதேசம் மாநிலம், வாரணாசி காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

வழக்கு தொடர்பாகக் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இந்தக் குற்றத்தில் தொடர்பில்லையென சுந்தர் பிச்சை உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் 3 அதிகாரிகளின் பெயர்களை வழக்கிலிருந்து நீக்கியிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்சப்பில் பகிரப்பட்ட யூடியூப் காணொளிக்கு, ஆட்சேபனம் தெரிவித்ததற்காகத் தனக்கு 8,500 மிரட்டல் அழைப்புகள் வந்தன என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர், அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“பத்திரிகையாளர்களை தூக்கிலிட வேண்டும்” – நீக்கப்பட்ட வீடியோ : கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர்கள்

வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், பாடலை உருவாக்கியதாகச் சொல்லப்படும் காசிப்பூரை சேர்ந்த இசைக்கலைஞர்கள், பாடல் பதிவு செய்யப்பட்ட ஸ்டியோ, பாடல் தயாரித்த உள்ளூர் இசை நிறுவனம் ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 504 (அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் திட்டமிட்ட அவமதிப்பு), 506 (கிரிமினல் மிரட்டல்), 500 (அவமதிப்பு), 120B (கிரிமினல் கூட்டுச்சதியின் ஒரு அங்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 பிரிவு (ஆபாசமான பொருட்களைத் தயாரித்தல் அல்லது வெளியிடுதல்) கீழ் உள்ள குற்றச்சாட்டுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தில் பங்கில்லையெனத் தெரிந்த தினமே கூகுள் அதிகாரிகளின் பெயர்கள் வழக்கிலிருந்து நீக்கப்பட்டது. மற்ற விசயங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகப் பெஹல்பூர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Source : PTI 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்