Aran Sei

‘குழந்தைகள் பெறுவது நீங்கள், பள்ளிக் கட்டணத்தை அரசு தரவேண்டுமா’ – பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு

த்தரபிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர்  ஒருவர், குழந்தைகளை பெற்றுக்கொள்வது பெண்கள், ஆனால் பள்ளிக் கட்டணத்தை மட்டும் மாநில அரசு ஏற்கவேண்டுமா என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், பாஜகவை சேர்ந்த அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் திவாகர் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, தனியார் பள்ளிகளில் கட்டணத்தை தள்ளுபடி செய்ய கோரி, சில பெண்கள் குழுவாக அவரை அணுகியுள்ளனர்.

எல்லை தாண்டி பயணிக்க அனுமதிக்க வேண்டும் – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம்

அதற்கு, “குழந்தைகளை பெற்றுக்கொள்வது நீங்கள். பள்ளிக் கட்டணம் செலுத்துவது நாங்களா? அரசுப் பள்ளிகள் எதற்கு இருக்கிறது. அங்கே கட்டணம் இல்லை. அரசுப் பள்ளிகளில் உணவு, உடை உட்பட எல்லாவற்றையும் கொடுக்கிறார்கள்.” என்று அப்பெண்களிடம் கடிந்துள்ளார்.

ரமேஷ் திவாகரின் பேச்சிற்கு பதிலளிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்த ஒரு பெண், இந்த பொது மக்கள்தான் உங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை மறக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

பெண்கள் கால்நடையோ, உயிரற்ற பொருளோ இல்லை – ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம்

இந்த சம்பவம் குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சமீர் சிங், “இந்த பிரச்சினை குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், பெண்களிடம் இதுபோல இழிவான வகையில் பேச யாருக்கும் உரிமை இல்லை.

பாஜக கட்சி சர்வ சமாஜத்தை (எல்லா பிரிவினரையும்) மதிக்கும் கட்சி. இது குறித்து ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், இந்த விவகாரம்  உடனே விசாரிக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, “ரமேஷ் திவாகரின் கருத்து துரதிர்ஷ்டவசமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். இதுதான் பாஜகவின் தன்மை. பாஜகவும் அதை சார்ந்தவர்களும் யாருக்கும் உதவியாக இல்லாததோடு, பெண்களை அவமானப்படுத்துகிறார்கள்.” என்று விமர்சித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்