Aran Sei

‘ஊடகங்களிடம் அதிகம் பேசினால் தேசதுரோக வழக்கு பாயும்’ : அச்சம் தெரிவிக்கும் பாஜக எம்எல்ஏ

credits : The Print

”நாங்கள் ஊடகங்களில் ஏதாவது கருத்து தெரிவித்தால் எங்கள் மீது தேசதுரோக வழக்கு பாயும்” என பாஜக சட்டமன்ற உறுப்பினர் அச்சம் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக சுயேட்சையாகவும், பகுஜன் சமாஜ் கட்சியியைச் சார்ந்தும் தேர்தலில் போட்டியிட்ட ராகேஷ் ரதோர், கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, பாஜக சார்பில் சீதாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றிப்பெற்று, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பழங்குடியினர் உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் – மகாராஷ்டிரா முதல்வருக்கு ஜார்கண்ட செயல்பாட்டாளர்கள் கடிதம்

இந்நிலையில், நேற்றைய தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ”சீதாப்பூரில் வெகு நாட்களாக கட்டப்பட்டு வரும் அவசர சிகிச்சை  மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?” என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, “நான் பல முயற்சிகள் எடுத்துவிட்டேன். சட்டமன்ற உறுப்பினருக்குப் பெரிதாக என்ன அதிகாரம் இருக்கிறது? நான் (உங்களிடம்) அதிகம் பேசினால் கூட என் மீது தேசத்துரோக வழக்கு பாயும்” என்று  பதிலளித்துள்ளார்.

‘பாலஸ்தீனர்களின் கண்ணியத்தையும் எதிர்ப்பதற்கான உரிமையையும் பறிக்கக்கூடாது’ – அருந்ததிராய் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கருத்து

மேலும், ”ஆளும் அரசாங்கத்தின் சட்டமன்ற உறுப்பினரான நீங்கள், அரசிடம் முறையிட முடியாதா?” என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், “சட்டமன்ற உறுப்பினர் மனதில் படுவதை கூற முடியும் என நினைக்கிறீர்களா? ” என்று தெரிவித்துள்ளார்.

‘பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து’ – விடுப்பு வழங்க முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை

கடந்த ஆண்டு, கொரோனாவை விரட்ட மக்கள் கைத்தட்ட வேண்டும், மணியடிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்ததை, ராகேஷ் ரதோர் கடுமையாக விமர்சிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ”கைதட்டுவது கொரோனாவை ஒழிக்குமா, இது முட்டாள்தனமானது” என்று தெரிவித்திருந்தார். இது வைராலனதையடுத்து அவர்,  உத்தரபிரதேச பாஜகவின் மாநில தலைமையால் கடுமையாக கண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்