Aran Sei

‘95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை; நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்குதான் தேவை’- உ.பி அமைச்சர்

95 சதவிகித இந்தியர்களுக்கு பெட்ரோல் தேவையில்லை என்றும் ஒரு சிலரே நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் பாஜகவைச் சேர்ந்த உத்தரபிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி தெரிவித்துள்ளார்.

நேற்று(அக்டோபர் 21), மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஜலாவுனில் செய்தியாளர்களிடம் பேசிய உபேந்திர திவாரி, “நீங்கள் 2014-க்கு முன்புக்கும், தற்போதைக்குமான புள்ளிவிவரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மோடிஜி மற்றும் யோகிஜியின் அரசு பதவியேற்றப் பின்னர், தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைப் பொறுத்தவரை, ஒரு சிலர்தான் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குதான் பெட்ரோல் தேவைப்படும். தற்போது, ​​நாட்டில் உள்ள 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்மை நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து வருகிறது.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்