Aran Sei

‘பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ – மாயாவதி விமர்சனம்

பாஜக ஆட்சியின் கீழும் தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்று, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான மாயாவதி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மார்ச் 3), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள மாயாவதி, “தலித்களும் பெண்களும் துன்புறுத்தலுக்கு உள்ளக்கப்படும் வேதனையான சம்பவங்கள் குறித்து அனைவரும் கவலைப்படுகிறார்கள். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில்கூட, இந்த அரசானது (பாஜக) உணர்ச்சியற்று அலட்சியமாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகள், ஹத்ராஸில் ஒருவர் கொல்லப்பட்டது, குஜராத்தில் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள், முந்தைய காங்கிரஸ் ஆட்சியைப் போலவே பாஜக ஆட்சியின் கீழும் தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது நிரூபணமாகிறது. இதை அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்