Aran Sei

உ.பி., சட்டப்பேரவை: எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

த்தரபிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதவியேற்கவுள்ளார். அவரது கட்சியிலிருந்து வெற்றி பெற்ற 111 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த அவரை தங்களின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்

கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான அகிலேஷ் யாதவ் தொடர்ந்து மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட  முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஏற்கனவே வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்குச் நெருக்கடி கொடுத்த சமாஜ்வாதி கட்சி, 111 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதமும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

பாஜகவின் வெற்றி இனி மெல்ல சரியும் – அகிலேஷ் யாதவ்

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தியாகம் என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார். “கர்ஹால் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதே சமயத்தில், அசம்கரின் முன்னேற்றத்திற்கும் உடன் நிற்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட எனது நாடாளுமன்ற பதவியைத் தியாகம் செய்வது அவசியம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்