Aran Sei

உ.பியில் பத்திரிகையாளர் மர்மமாக மரணம் : ‘குடும்பத்தின் கண்ணீருக்கு உ.பி அரசின் பதிலென்ன?’ – பிரியங்கா காந்தி கேள்வி

த்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சார்ந்த தொலைக்காட்சி நிருபர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எ.பி.பி நியூஸ் மற்றும் எ.பி.பி கங்கா தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பத்திரிகையாளர் சுலப் ஸ்ரீவஸ்தவா, செய்தி சேகரித்து விட்டு இரவு 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் இறப்பதற்கு ஒருநாள் முன்னர், தொலைக்காட்சியில் மதுபானம் விற்கும் கும்பல் குறித்து செய்தி வெளியிட்டதற்காக மிரட்டப்பட்டதாகவும், இதன் காரணமாக அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பிய அவர் விபத்தில் சிக்கி அங்குள்ள செங்கல் சூளை அருகில் கண்டெடுக்கப்பட்டதாகவும் , அந்த சூளையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று காவல் துறை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

மேலும், முதற்கட்ட விசாரணையில் பத்திரிகையாளர் சுலப்பின் இருசக்கர வாகனம் அருகிலுள்ள கை பம்பில் மோதியது தெரிய வந்துள்ளதாக காவல் துறை கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, பத்திரிகையாளர் சுலப் ஸ்ரீவஸ்தவாவின் குடும்பத்தின் கண்ணீருக்கு உத்தரபிரதேச அரசு என்ன பதில் சொல்ல போகிறது என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்