Aran Sei

உத்திரபிரதேச ஊடகவியலாளர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்

த்திரபிரதேசத்தில் செயல்பட்டு வரும் மதுபான மாஃபியா கும்பல்குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சுலப் ஸ்ரீவத்சவா மர்மான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலம் முழுவதும் வேரூன்றிவிட்டதாக சுலப் ஸ்ரீவத்சவா கூறியிருக்கும் ‘மதுபான மாஃபியா மற்றும் நிர்வாகத்தின் தொடர்பு’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

‘ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கிய ஊழலில் பாஜகவினருக்கும் தொடர்புள்ளது’ – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பிரதாப்கர் மாவட்டத்தில், தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் சுலப் ஸ்ரீவத்சவா, ஜூன் 13 ஆம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போது மர்மமான முறையில் உயிரிழந்தார் என பிரியங்கா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக ஜூன் 12 ஆம் தேதி பிரயாக்ராஜ் மண்டல காவல்துறை கூடுதல் இயக்குநருக்கு ஸ்ரீவத்சவா எழுதியிருந்த கடிதத்தில், “சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பான செய்தி வெளியிட்டதில் உள்ளூர் மதுபான மாஃபியா கோபமடைந்திருப்பதால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்” என கோரியிருந்ததாக பிரியங்கா கூறியுள்ளார்.

‘55 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இணைத்து, பசியால் ஏற்படும் மரணத்தை தவிருங்கள்’ –வைகோ கோரிக்கை

சாலை விபத்தில் ஸ்ரீவத்சவா உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்திருப்பதாக கூறியுள்ள பிரியங்கா, செங்கல் சூளை அருகே ஸ்ரீவத்சவா உயிரிழந்து கிடந்ததாகவும், அவரது தலையில் கடுமையான காயங்கள் இருந்தததாகவும் தெரிவித்துள்ளார்.

”இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். மாநிலம் முழுவதும் வேரூன்றியுள்ள மதுபான மாஃபியா மற்றும் நிர்வாகத்தின் தொடர்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரியங்கா அந்தக் கடித்ததில் கூறியுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் தொழுகைக்கு சென்ற முதியவரைத் தாக்கி தாடியை மழித்த கும்பல் – வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை

மேலும், மதுபான மாஃபியாவிற்கு ஒரு ஊடகவியலாளர் அஞ்சுகிறார் என்பது மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி அதன் மேலாதிக்கத்தை இழந்துவிட்டது என்பதை காட்டுகிறது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்