Aran Sei

பட்டியல் சாதி பெண்ணின் திருமணத்தை லவ் ஜிகாத் என தடுத்து நிறுத்திய வலதுசாரிகள்- மனம் விரும்பி மணம் செய்யவிருந்ததாக பெண் ஒப்புதல்

த்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்,  மதம் மறுத்துத் திருமணம் செய்யவிருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் திருமணத்தை லவ் ஜிகாத் என்று கூறி  கர்ணி சேனா எனும் வலது சாரி அமைப்பினர்  தடுத்து  நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள  பல்லியா பகுதியின் காவல் கண்காணிப்பாளர் விபின் தாதா, ” மகள் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிந்துள்ளோம். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவோம். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில்  நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும்  தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 71,132 பதிவுகளை நீக்கிய கூகுள் – பயனாளர்களின் புகாரையடுத்து நடவடிக்கை

மேலும், “சிலர் கட்டாயமதமாற்றம் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். ஆனால், எங்களுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை.  கட்டாயமதமாற்றம் என்று கூறி சிலர் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு கூட்டி வந்தனர். பின்னர் அந்தப் பெண்ணை அவரது குடும்பத்திடம் ஒப்படைத்தோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து  வெளியாகியுள்ள காணொளியில் கர்ணி சேனா அமைப்பைச் சார்ந்த  ஒருவர் அந்தப் பெண்ணிடம், அவரது சாதி, மதம் மற்றும்  அவர் மணக்கும் மணமகனின்  சாதி குறித்தும், அவர் திருமணம் செய்ய இருக்கும் மணமகன் இஸ்லாமியர் என்றால் “ஏன் இஸ்லாமியரை மணக்கிறாய்?”  என்று கேள்வியெழுப்பி உள்ளதாகவும் அந்தச் செய்தி  தெரிவிக்கிறது.

தற்சார்பு இந்தியா திட்டத்தில் தொழிலாளர் உரிமை அடிப்படையானதல்ல – நீதிமன்றத்தில்  ஒன்றிய அரசு பதில்

இந்நிலையில் அந்தப் பெண் , “நான் தலித் சமுகத்தைச் சார்ந்தவள். நான்  18 வயது பூர்த்தி அடைந்துள்ளேன். எனது விருப்படியே அவரை மணக்க விரும்பினேன்”  என்றும்  பதிலளித்துள்ளார்.

source; the indian express

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்