Aran Sei

சுற்றித்திரியும் பசுகளுக்கு 20 பாதுகாப்பு முகாம் – 12 கோடி ஒதுக்கிய உத்தரப்பிரதேச அரசு

சுற்றித்திரியும் பசுகளால் ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்க, உத்தரப்பிரதேச மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ’கௌ சன்ரக்ஷன் கேந்திரா’ என்ற பெயரில் 20 பசு பாதுகாப்பு முகாம்களை நிறுவவுள்ளதாக  யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உரிமையாளர் இல்லாத மாடுகள், நெடுஞ்சாலைகளிலும், சாலைகளிலும்  சுற்றி திரிவதால், விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. மேலும், பசுக்கள், விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து கொண்டும் இருக்கின்றன. இது அம்மாநில மக்களின் தினசரி வாழ்க்கையைக் கடினமாக்கியுள்ளது.

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

இதுகுறித்து, நேற்று (ஜனவரி 16) உத்திரப்பிரதேச கால்நடை பராமரிப்புத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், “கேட்பாற்று சுற்றித்திரியும் பசுகளுக்காக மாநில அரசு ரூ. 12 கோடியை ஒதுக்க அனுமதித்துள்ளது. இந்த நிதியுடன், எட்டாவா, கான்பூர் தேஹாத், அலிகார், பரேலி, அயோத்தி, சீதாபூர், லக்னோ, ரே பரேலி, ஜான்சி, பண்டா, பஸ்தி, சித்தார்த் நகர் ஆகிய இடங்களில் தலா ஒரு பசு பாதுகாப்பு முகாம் உருவாக்கப்படும். மேலும், அம்பேத்கர் நகர், ஹர்தோய், பஹ்ரைச் மற்றும் ஃபதேபூரில் தலா இரண்டு பசு பாதுகாப்பு முகாம்களும் அமைக்கப்படும். ஒவ்வொரு முகாமையும் நிறுவுவதற்கு 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ” என்று அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

பசு கடத்தலில் ஈடுபட்ட பசு காவலர் – பஜ்ரங் தளத்தின் முன்னாள் நிர்வாகி கைது

சுற்றித்திரியும் பசுகளுக்கு தீர்வு காணும் விதமாக, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், ஏற்கனவே கோசாலைகள் என்ற திட்டத்தை அறிமுகபடுத்தினார்.

இதன்மூலம், உரிமையாளர் இல்லாத மாடுகள் இந்தத் தொழுவங்களுக்குக் கொண்டு வரப்பட்டப்பட்டன. தொழுவங்களை நிர்வகித்தவர்கள் மாடுகளுக்கு உணவளித்து பரமாரித்துக் வந்தனர்.

இந்நிலையில், யோகி ஆதித்தியநாத், கோசாலைகளுக்கு நிதியை நிறுத்தியதால், மாடுகளின் நிலை மோசமாக உள்ளதாக கோசாலைகளை நிர்வகிக்கும் பஞ்சாயத்து தலைவர்கள் கடிதம் எழுதினர்.

கோசாலைகளுக்கு நிதி கொடுக்காத யோகி ஆதித்தியநாத் – பசியால் மடியும் நிலையில் பசுக்கள்

உத்திர பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் இருக்கும் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், யோகி ஆதித்தியநாத்திற்கு எழுதிய கடிதத்தில், டிசம்பர் 25 ஆம் தேதிக்கு முன் நிதியுதவி அளிக்காவிட்டால், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கோசாலைகளில் இருந்து பசுக்கள் விடுவிக்கப்படும் என்று எச்சரித்திருந்தனர்.

“2019-20 நிதியாண்டில் பசுக்களை பராமரிப்பிற்கென 613 கோடி ரூபாயை ஆதித்தியநாத் அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் பசு பராமரிப்பிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மாநில அரசு, ஒவ்வொரு மாட்டிற்கும் முப்பது ரூபாய் கணக்கில் ஒரு தொகையை கிராம பஞ்சாயத்துகளுக்கு கொடுக்க வேண்டும் எனும் நிலையில், பிப்ரவரி மாதத்தில் இருந்தே சில மாவட்டங்களுக்கு, கோசாலைகளுக்கான நிதி நிறுத்தப்பட்டது. மற்ற மாவட்டங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து நிதி அனுப்பப்படவில்லை.” என்று டெலிகிராஃப்பின் ஒரு செய்தி குறிப்பிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்