Aran Sei

லக்கிம்பூர் வன்முறையை விசாரிக்க ஒருநபர் ஆணையத்தை அமைத்த உ.பி அரசு – இரண்டு மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

ட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரிக்க உத்தரபிரதேச அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது.

இன்று(அக்டோபர் 7), உள்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த ஆணையம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க ஆணையத்திற்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து, அக்டோபர் 6 ஆம் தேதி தேதியிட்ட மாநில அரசின் அறிவிப்பில், “விசாரணை கமிஷன் சட்டம், 1952-ன் மூன்றாம் பிரிவில்  வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அலகாபாத் நீதிபதி(ஓய்வு) பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவாவை ஒற்றை உறுப்பினராகக் கொண்டு லக்கிம்பூர் கேரியைக் தலைமை இடமாகக் கொண்ட விசாரணை ஆணையத்தை நியமிப்பதில் ஆளுநர் மகிழ்ச்சி அடைகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்ட்ராவில் பந்த்: சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி அழைப்பு

மேலும், “இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் ஆணையம் விசாரணையை முடிக்க வேண்டும். ஆணையத்தில் உள்ள பதவியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், அரசு அதை செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்