Aran Sei

வன்கொடுமை வழக்கை விசாரிக்கவில்லையென குற்றச்சாட்டு : ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம்

Image Credits: NDTV

த்தரப்பிரதேச அரசு ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி, பிரவீன் குமார் லக்ஸ்கர் உட்பட 16 ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது . பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப்பலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு ஹத்ராஸ் மாவட்டத்தின் அதிகார வரம்புக்குள்தான் வருகிறது.

பிரவீன் குமார் லக்ஸ்கர் மிர்சாபூரின் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

உத்தரப்பிரதேச நீர் வாரியத்தின் கூடுதல் இயக்குனர் ரமேஷ் ரஞ்சன் ஹத்ராஸில் மாவட்ட ஆட்சியராக பணிஅமர்வார் என்று அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 14-ம் தேதி ஹத்ராஸில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் நான்கு ஆதிக்க சாதி ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து பிரவீன் குமார் லக்ஸ்கர் மீது அனைவரின் கவனமும் குவிந்தது. அவர் செப்டம்பர் 29 அன்று டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹத்ராஸ் வழக்கில் உத்தரபிரதேச அரசின் பொய் அம்பலமாகியுள்ளது – அகிலேஷ் யாதவ்

அந்தப் பெண்ணின் உடல், செப்டம்பர் 30-ம் தேதி அவரது வீட்டிற்கு அருகில் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்குகளை அவசரமாக நடத்த உள்ளூர் காவலர்கள் கட்டாயப்படுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

நவம்பர் மாதம், விசாரணை சரியாக நடத்தப்படாததின் காரணமாக உத்தரபிரதேச அரசு மாவட்ட நீதிபதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத்தை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வுக் கவலை தெரிவித்தது.

ஹத்ராஸ் கொடூரம் – `ஆணவக் கொலை’ எனும் கோணத்தில் விசாரிக்கிறதா சிபிஐ?

பிரவீன் குமார் லக்ஸ்கரை தவிர, கோண்டா மாவட்ட நீதிபதி நிதின் பன்சால் பிரதாப்கருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், நொய்டாவின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ருதி, பால்ராம்பூரின் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் கிருஷ்ணா கருணேஷ், காஜியாபாத் மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்ட மற்றவர்களில் முக்கியமானவர்கள் ஃபதேபூர் மாவட்ட நீதிபதி சஞ்சீவ் சிங், அவர் தற்போது சாண்டௌலியின் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்