Aran Sei

சட்ட விரோத மதமாற்ற தடைச் சட்டம் – கடும் அமளிக்கிடையே உ.பி., சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

credits : PTI

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ”இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதல் (லவ் ஜிகாத்) என்ற பெயரில் திருமணம் செய்து, மதமாற்றம் செய்வதைத் தடுப்பதற்குச் சட்டம் இயற்றப்படும்” எனத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

அதன்படி, மதமாற்றத்தைத் தடுப்பதற்காக மாநில சட்ட கமிஷன் புதிய மசோதாவைத் தயாரித்து உத்தர பிரதேச அரசுக்குச் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று, உத்தர பிரதேச அமைச்சரவை இயற்றிய அவசரச்  சட்டத்திற்கு, அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல்  கடந்த ஆண்டு (27/11/20) ஒப்புதல் அளித்தார்.

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

 

இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள், அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

 

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

மதமாற்றம் என்னும்  நோக்கத்திற்காக  திருமணம் செய்யப்பட்டிருந்தால், அந்த திருமணம் செல்லாது என இந்தச் சட்டம் தெரிவிக்கிறது. இரு வேறு மதங்களுக்குள் திருமணம் செய்து கொள்வோர், முன் கூட்டியே மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், திருமணத்திற்குப் பிறகு தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோரும் மாவட்ட நீதமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்றும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

இந்தச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.15,000 அபராதத்துடன் ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

சிறார்கள், பட்டியல் சமூக மக்கள், பழங்குடி மக்கள் ஆகியோரைச் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்தால் ரூ.25,000 அபராதம் உட்பட மூன்று ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்படும் எனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை மதமாற்றம் செய்தால் ரூ.50,000 உட்பட, மூன்று ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

இந்நிலையில், இந்த அவசர சட்டத்தை, சட்டமாக மாற்றும் முயற்சியில் உத்தர பிரதேச அரசு இறங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று (24.02.21), எதிர்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையில், உத்தர பிரதேச அரசு, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஆராதனா மிஷ்ரா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த லால்ஜி வெர்மா சட்டமன்றத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள், அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். லவ் ஜிகாத்தை தடுப்பதற்காகவே, இந்த சட்டம் இயற்றப்படுவதாக, உத்தர பிரதேச பாஜகவினர் தெரிவித்து வந்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்