Aran Sei

‘உங்களுக்கு எத்தனை முறை சொல்வது?’ – மதமாற்ற விவகாரத்தில் உ.பி., அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

credits : indian express

த்தர பிரதேசத்தில் வெவ்வேறு மதத்தை சேர்ந்த நபர்கள் திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து, அவர்களுக்கு உருவான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ”வயது வந்த இருவர், ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய நிம்மதியான வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதை நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது” என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

2006ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு வழக்கில், அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி ”மார்க்கண்டேய கட்ஜு” வழங்கிய, சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது.

யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான ட்வீட் : எஃப்ஐஆரை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்

அந்த தீர்ப்பில் “இது ஒரு சுதந்திரமான ஜனநாயக நாடு. ஒரு நபர் வயது வந்த பின், அவன் அல்லது அவள் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம். அவர்களின் பெற்றோர் அத்தகைய சாதி அல்லது மதங்களுக்கு இடையிலான திருமணத்தை ஒப்புக் கொள்ளாவிட்டால், பெற்றோர்கள் அதிகபட்சமாக அவர்களுடைய மகன் அல்லது மகன் உடனான சமூக உறவுகளை துண்டித்துக் கொள்ளலாம். ஆனால், சாதி மதங்களை கடந்து திருமணம் செய்பவர்களுக்கு எதிராக, வன்முறைகளை தூண்டுவது, அச்சுறுத்தல்கள் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

 

‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்

மதங்களை கடந்து திருமணம் செய்துகொள்பவர்களை தடுப்பதற்காக, உத்தர பிரதேச அரசு, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டத்தின் கீழ் பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படுவதும், போலியான கைதுகள் தொடர்ந்து நடப்பதும் நடைபெற்றுவருகிறது. இதுவரை,அலகாபாத் உயர் நீதிமன்றம், மதங்களை கடந்து திருமணம் செய்த 125 தம்பதியினருக்கு பாதுகாப்பு அளித்துள்ளது.

எத்தனை முறை சொல்வது – “திருமணத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை” – அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ”அலகாபாத் உயர் நீதிமன்றம் மதங்களை கடந்து திருமண செய்த தம்பதியினரை காப்பாற்றி, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது என்று கூறுவது முதல் முறை அல்ல. இதில் ”முதல் முறை அல்ல” என்பது முக்கியமான வார்த்தைகள்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “உத்தர பிரதேச அரசு சட்டத்திற்கு மேலானதா? முதல்வரும் காவல்துறையின் தலைமை இயக்குனரும் சட்டத்தின் ஆட்சியை நம்பவில்லையா? லவ் ஜிஹாத் (மதத்தை கடந்த திருமணத்திற்கு வலதுசரிகள் வைத்துள்ள பெயர்) வழக்குகள் என்று அழைக்கப்படுபவைகளில் பலமுறை எதிரான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், உத்தர பிரதேச அரசாங்கமும் காவல்துறையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் இந்தச் சட்டத்தின் கீழ், மீண்டும் மீண்டும் வழக்குகளைப் பதிவு செய்து வருவது அவமானம்” என்றும் ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்