Aran Sei

ஊழியர்கள் இல்லை, எப்படி நடக்கும் சிகிச்சை ? – வென்டிலேட்டர்கள் இருந்தும் 5 உயிர்கள் பலி

image credit : jagran.com

த்தர பிரதேசத்தின் இட்டாவாவில், மாவட்ட மருத்துவமனையின் தாய் சேய் நல பிரிவில் அமைந்துள்ள 100 படுக்கை கொரோனா மருத்துவமனையில் 12 வென்டிலேட்டர்கள் உள்ளன. ஆனால் ஆப்பரேட்டர் இல்லாத நிலையில் அவை தாமே மூச்சுத்திணறுகின்றன என்று ஜாக்ரன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் இருவர் வெள்ளிக்கிழமை மரணத்தைத் தழுவினர். இவர்களோடு சேர்த்து முந்தைய 24 மணி நேரத்தில் 5 நோயாளிகள் தங்கள் உயிரை இழந்தனர் என்று ஜாக்ரன் தெரிவித்துள்ளது.

துணைநிலை மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக மருத்துவர்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்தப் பிரிவுக்கு மேற்பார்வை செய்யச் சென்றிருந்த மகளிர் நல மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அசோக் ஜாதவ் நிலைமையின் தீவிரத்தின் காரணமாக துப்புரவு பணியாளர்களையே வென்டிலேட்டர்களை இயக்கச் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் நிலைமை விரைவில் சீராகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதேசமயம் கொரோனா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அப்துல் காதிர், ” எங்களிடம் ஒரே ஒரு துப்புரவு பணியாளர், ஒரு வார்டு பாய் மட்டுமே உள்ளனர். அவர்கள் 20 மணிநேரம் வேலை பார்க்கின்றனர். ஊழியர்களை அதிகரிக்க வேண்டிய அவசரம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

“தற்போதைய நிலைமையில் தொற்று ஏற்பட்டு 35 நோயாளிகள் அட்மிட் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 12 நோயாளிகள் தீவிரமான நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக வென்டிலேட்டர் வசதியின் அவசியம் இருக்கிறது. ஆனால் அதை இயக்கும் திறன் படைத்த ஊழியர்கள் இல்லாததால் நிலைமை தீவிரமடைந்து இருக்கிறது.” என்றார், அவர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்